Theme Check

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவு..!!

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவு..!!

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவு..!!
X

பாஐக முன்னாள் மாநில தலைவரும், ஒன்றிய இணை அமைச்சருமான எல்.முருகன் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, முரசொலி நாளிதழ் அலுவலக நிலம் தொடர்பாகவும், திமுக குறித்தும் எல்.முருகன் அவதூறாக பேசியதாக அவர் மீது திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஒரு கோடி இழப்பீடு கேட்டிருந்தார்.

தற்போது எல்.முருகன் ஒன்றிய அமைச்சர் என்பதால், இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது. அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஏப்ரல் 22-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story
Share it