மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கூடுதல் பொறுப்பு..!!
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கூடுதல் பொறுப்பு..!!

முக்தர் அப்பா் நக்வி, ஆர்சிபி சிங்-கின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இருவரும் தங்களது மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இருவரின் பங்களிப்பு குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முக்தர் அப்பாஸ் நக்வியின் சிறுபான்மையினர் நலத்துறை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஆர்சிபி சிங் வகித்து வந்த இரும்பு துறை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Tags:
Next Story

