நீதியற்ற நிர்வாகம்... கமல் பிரச்சார வாகனத்தை நிறுத்தி அடுத்தடுத்து சோதனை.. கடும் கண்டனம் !!

நீதியற்ற நிர்வாகம்... கமல் பிரச்சார வாகனத்தை நிறுத்தி அடுத்தடுத்து சோதனை.. கடும் கண்டனம் !!

நீதியற்ற நிர்வாகம்... கமல் பிரச்சார வாகனத்தை நிறுத்தி அடுத்தடுத்து சோதனை.. கடும் கண்டனம் !!
X

வாகன சோதனை என்ற பெயரில் கமல்ஹாசன் செல்லும் இடங்களின் வழியெங்கும் வாகனத்தை மறித்து இடையூறு கொடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தேர்தர் பிரச்சாரத்தின் வேகத்தை குறைக்க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் பரப்புரை பயணத்தின் வேகத்தையும் எழுச்சியையும் கண்டு பதறிப்போன அடிமை அரசு, அவர் பயணத்தின் வழியெங்கும் பல்வேறு இடங்களில் வாகனங்களை மறித்து “சோதனை” என்ற பெயரில் இடையூறு கொடுத்து வருகின்றது.

மடியில் கனமில்லாததால் எங்களுக்கு வழியில் பயமில்லை என்றாலும், இது எங்கள் பிரச்சாரத்தின் வேகத்தை குறைக்க செய்யும் திட்டமிட்ட செயலாகத்தான் நினைக்க வேண்டியுள்ளது.

ஆவின் வண்டிகளும், ஆம்புலன்ஸ்களும் பணம் கொண்டு செல்ல ஆளும் கட்சியினரால் பயன்படுத்தப் படுவதாக ஊடகங்கள் சொல்வதை கண்டுகொள்ளாத இந்த நீதியற்ற நிர்வாகம், நேர்மைக்கு அடையாளமான எங்கள் தலைவர் நம்மவர் அவர்களின் பயணத்திற்கு ஏற்படுத்தும் இடையூறினை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வரும் வாக்குப்பதிவு நாளில் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பயணித்த பிரசார வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற கமல்ஹாசனின் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதேபோல் மேலும் இரு இடங்களில் அவரது வாகனத்தை மறித்து சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it