Theme Check

இயற்கைக்கு மாறான உடலுறவு.. முதலிரவில் புதுப்பெண் மயக்கம்.. சைக்கோ கணவனுக்கு வலை..!

இயற்கைக்கு மாறான உடலுறவு.. முதலிரவில் புதுப்பெண் மயக்கம்.. சைக்கோ கணவனுக்கு வலை..!

இயற்கைக்கு மாறான உடலுறவு.. முதலிரவில் புதுப்பெண் மயக்கம்.. சைக்கோ கணவனுக்கு வலை..!
X

நாகை அருகே, முதலிரவில் இயற்கைக்கு மாறான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான புதுப்பெண் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தலைமறைவான கணவனை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகள் நளினி (26) என்பவருக்கும், நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதூரை சேர்ந்த பிச்சையன் மகன் ராஜ்குமார் (37) என்பவருக்கும் ஆலத்தம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 27-ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில், மணப்பெண்ணின் தாய் பரமேஸ்வரி, எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “திருமணத்திற்கு வரதட்சணையாக 12 சவரன் நகை, பைக் மற்றும் மூன்று லட்சம் ரூபாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினோம்.

மாப்பிள்ளை வீட்டில் நடந்த முதலிரவின் போது, மாப்பிள்ளை என் மகளை இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் முதலிரவு அறைக்கு ஓடியுள்ளனர்.

அதை பார்த்து ராஜ்குமார் தப்பி விட்டார். உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்த எங்கள் மகளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனநலம் பாதித்தவரை போல நடந்து கொண்ட ராஜ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

Next Story
Share it