இயற்கைக்கு மாறான உடலுறவு – ஐஐடி பட்டதாரி மீது மனைவி புகார்!!
இயற்கைக்கு மாறான உடலுறவு – ஐஐடி பட்டதாரி மீது மனைவி புகார்!!

கணவர் இயற்கைக்கு மாறாக உடலுறவு வைக்கக் கோரி துன்புறுத்தியதாக மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் ஐஐடி பாம்பேவில் ஒன்றாக படித்தனர். பெண் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர். அந்த நபர் பெங்களூரைச் சேர்ந்தவர். படிக்கும் போது இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்தனர். இந்நிலையில், பெண்ணை இயற்கைக்கு மாறான விதத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என கணவர் தொடர்ந்து கட்டாயப்படுத்தி உள்ளார்.

ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அப்பெண் சத்தீஸ்கரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். சிறிது காலம் கழித்து அந்த பெண்ணை சமாதானப்படுத்த சத்தீஸ்கர் சென்ற கணவர், இனி இது போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என உறுதி அளித்துள்ளார்.
அதை நம்பி அப்பெண் பெங்களூரு திரும்பிய நிலையில், அதே கொடுமையை மீண்டும் செய்துள்ளார். மீண்டும் கணவர் வீட்டை விட்டு அந்த பெண் வெளியேறிய நிலையில், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பெண்ணின் தந்தைக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்த அந்த பெண் சத்தீஸ்கர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சத்தீஸ்கர் காவல்துறை அதை பெங்களூர் காவல்துறைக்கு இடம் மாற்றியது.
ஆனால், பெங்களூரு காவல்துறை தனது விசாரணையின் போது முக்கிய குற்றப்பிரிவை சேர்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதை அடுத்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தை அப்பெண் நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ங்களூரு காவல்துறை நடவடிக்கையை சாடியுள்ளது. மேலும் வழக்கை முறையாக விசாரித்து இரண்டு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
newstm.in

