Theme Check

தஞ்சையில் வரலாறு காணாத பாதுகாப்பு! 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை என எதிர்பார்ப்பு!

தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா அறிவிக்கப்பட்ட நாள் முதலே தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தினத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சையில் வரலாறு காணாத பாதுகாப்பு! 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை என எதிர்பார்ப்பு!
X

தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா அறிவிக்கப்பட்ட நாள் முதலே தினமும் ஒரு லட்சதிற்கும் அதிகமான அளவில் பக்தர்கள் வருகை தருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட தினத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

கோவிலைச் சுற்றி சிசிடிவி கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவிலுக்குள் நுழையும் ஒவ்வொருவரும் பிரத்யேகமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பறக்கும் கேமராக்கள் மூலம் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட இருக்கிறது. கோவிலுக்குள் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதற்கேற்ப தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தஞ்சையில் வரலாறு காணாத பாதுகாப்பு! 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை என எதிர்பார்ப்பு!

1997-ம் ஆண்டில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவின் போது யாகசாலையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டு 48 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.இதை கவனத்தில் கொண்டு யாகசாலை பந்தல் கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் கூட்டத்தில் நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கவும், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சையில் வரலாறு காணாத பாதுகாப்பு! 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை என எதிர்பார்ப்பு!

கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் மென்பொருள் உதவியுடன் மடிக்கணினியில் உடனுக்குடன் கண்காணிக்கப்படும் .
குற்றவாளிகள் எவரும் கோயிலுக்குள் வந்தால் குறிப்பிட்ட மென்பொருள் மூலம் அடையாளம் காணப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் தடைசெய்யப்பட்ட சாதனம் கொண்டு வந்தாலும் உடனே கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it