Theme Check

யூடியூப் பார்த்து தனி விமானம் உருவாக்கி அசத்திய இந்திய வம்சாவளி குடும்பம் !

யூடியூப் பார்த்து தனி விமானம் உருவாக்கி அசத்திய இந்திய வம்சாவளி குடும்பம் !

யூடியூப் பார்த்து தனி விமானம் உருவாக்கி அசத்திய இந்திய வம்சாவளி குடும்பம் !
X

யூடியூப் பார்த்து விமானம் ஒன்றை உருவாக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் அசத்தி சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். பல்வேறு நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் பலரும் வேலை, வருமானம் இழந்து தற்கொலை முடிவை எடுத்தனர். அதேபொதுமுடக்க காலத்தில் சாதித்தவர்களும் உள்ளனர்.

plane

ஆனால் இங்கு தனி நபர் இல்லாமல் குடும்பத்துடனே இணைந்து ஒருவர் தனி விமானத்தை ஊரடங்கு காலத்தில் தயாரித்துள்ளார். அதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் யூடியூப் பார்த்து 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானம் ஒன்றை உருவாக்கி இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியவம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அசத்தியுள்ளது.

plane

இலங்கிலாந்தில் வசிக்கும் அசோக் பயிற்சி பெற்ற விமானி ஆவார். அசோக் மற்றும் அவரது மனைவி அபிலாஷா இருவரும் விமானம் ஒன்றை வாங்க விரும்பியுள்ளனர். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற விமானத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

plane

இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களுக்கு விருப்பமான வகையில் விமானத்தை தாங்களே உருவாக்க முடிவு செய்துள்ளனர். இருவரும் வீட்டில் ஒன்றாக இதற்கான நேரத்தை செலவிட ஏற்றவாறு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விமானத்திற்கான பாகங்களை தென்ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கியுள்ளனர்.

plane

இதையடுத்து விமானம் தயாரிக்கும் வழிகாட்டுதல் கையேடு மற்றும் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் அசோக்கும் அவரது மனைவியும் இரு குழந்தைகள் தங்களது விருப்பத்திற்கேற்ற வகையில் 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
தற்போது அவர்கள் தயாரித்துள்ள குட்டி விமானம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச அளவில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it