Theme Check

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 அறிவிப்பு! ரசிகர்கள் பெரும் ஷாக் !!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 அறிவிப்பு! ரசிகர்கள் பெரும் ஷாக் !!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 அறிவிப்பு! ரசிகர்கள் பெரும் ஷாக் !!
X

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்திப் பறவை படங்களில் நடித்தவர் சிவகார்த்திகேயன். அப்படங்கள் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. எனினும் அடுத்துவந்த படம் சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக்கியது. அதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

பொன்ராம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரையுலகில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து, பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் ரஜினி முருகன், சீமராஜா படங்கள் வெளிவந்தது. எனினும் முதல் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாக உள்ளது.

varuthapadatha-valibar-sangam

இந்த நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை இயக்குநர் பொன்ராம் வெளியிட்டுள்ளார். அதாவது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு இருக்காது என அவர் கூறியுள்ளார்.

பொன்ராம் தனது ட்விட்டர் பதிவில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார். அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எடுப்போம், என தெரிவித்துள்ளார்.

அதாவது இதன் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மாட்டார் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனினும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு காத்திருப்பதாக பலரும் அதற்கு கமாண்ட் செய்து வருகின்றனர்.


பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடித்திருக்கும் எம்ஜிஆர் மகன் படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து பொன்ராம் அடுத்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it