Theme Check

கடைசி வரையில் கட்டுப்பாடு காத்தவர் அன்பழகன்!! கி.வீரமணி உருக்கம்!!

வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று நள்ளிரவு 1 மணிக்கு, தனது 98வது வயதில் காலமானார். தமிழக அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பேராசிரியர் அன்பழகனின் மறைவுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பேராசிரியர் அன்பழகனின்

கடைசி வரையில் கட்டுப்பாடு காத்தவர் அன்பழகன்!! கி.வீரமணி உருக்கம்!!
X

வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று நள்ளிரவு 1 மணிக்கு, தனது 98வது வயதில் காலமானார்.

தமிழக அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பேராசிரியர் அன்பழகனின் மறைவுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பேராசிரியர் அன்பழகனின் மறைவு திமுகவிற்கு பெரும் இழப்பு. ஸ்டாலினுக்கு அரசியல் ஆசானாகவும், திமுகவிற்கு பெரும் தூணாகவும் இருந்து வந்த பேராசிரியரின் இழப்பு திமுக தொண்டர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது.

கடைசி வரையில் கட்டுப்பாடு காத்தவர் அன்பழகன்!! கி.வீரமணி உருக்கம்!!

பேராசிரியர் திரு.அன்பழகனின் உடல் மீது திமுக கொடி போர்த்தப்பட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பேராசிரியர் க.அன்பழகனின் உடலுக்கு முக ஸ்டாலின், சாந்தா ஸ்டாலின், சகோதரி செல்வி மற்றும் மு.க. தமிழரசு, நேரு, டி.ஆர். பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சத்யராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கனிமொழி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கடைசி வரையில் கட்டுப்பாடு காத்தவர் அன்பழகன்!! கி.வீரமணி உருக்கம்!!

அன்பழகன் மறைவு குறித்து கி.வீரமணி தெரிவித்துள்ள இரங்கற் செய்தியில், தந்தை பெரியார் தம் சுயமரியாதைச் சூரணத்தை, மருத்துவர் நோயாளிக்குத் தருவதைப் போல் தவறாது தருபவரும், அறிஞர் அண்ணாவின் தம்பிகளில் முதன்மையரும், கலைஞரின் தலைமையை ஏற்று கடைசி வரை கட்டுப்பாடு காத்தவருமான, கொள்கை மாவீரர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகள் ஏழு நாட்களுக்குத் தள்ளி வைக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it