Theme Check

உபி தேர்தல் முடிவுகள்: சறுக்கலை சந்தித்த பாஜக.. அகிலேஷின் அலட்சியம்.. அலசல் ரிப்போர்ட்..!

உபி தேர்தல் முடிவுகள்: சறுக்கலை சந்தித்த பாஜக.. அகிலேஷின் அலட்சியம்.. அலசல் ரிப்போர்ட்..!

உபி தேர்தல் முடிவுகள்: சறுக்கலை சந்தித்த பாஜக.. அகிலேஷின் அலட்சியம்.. அலசல் ரிப்போர்ட்..!
X

403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. போட்டி கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி 2வது இடத்தில் உள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.

தபால் வாக்கு எண்ணிக்கையில் நிஷாத் கட்சி வேட்பாளர் விவேகானந்தா பாண்டே, கட்டா தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ரன்விஜய் சிங் ஹட்டா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முனைப்பில் உள்ளது. அக்கட்சி 250-க்கும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

சமாஜ்வாதி கட்சி 115 இடங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஓரிடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 312 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

இந்தத் தேர்தலில் 300 தொகுதிகளுக்கும் கூடுதலான கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைப்போம் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் கூறி வந்தனர்.

ஆட்சி அமைப்பதற்கான இடங்களைவிட கூடுதலான இடங்களில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சற்று சறுக்கலை சந்தித்தபோதும், மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் காணப்படுகிறது.

சர்ச்சைக்குரிய இடங்களான உன்னாவ், ஹத்ராஸ், லக்கிம்பூர் கேரி ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

இந்த முறை சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பிடிக்கும் என அகிலேஷ் யாதவ் அதீத நம்பிக்கையுடன் இருந்தார். இந்த அதீத நம்பிக்கை அலட்சியமாக மாறி அவர் தீவிரமாக வேலை செய்யவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எனினும், அவர் போட்டியிட்ட தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுள்ளார். அகிலேஷின் அலட்சியம்தான் சமாஜ்வாதி தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Next Story
Share it