உ.பி. சட்டசபை தேர்தலில் 40 % இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும்- பிரியங்கா காந்தி !!
உ.பி. சட்டசபை தேர்தலில் 40 % இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும்- பிரியங்கா காந்தி !!

உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு முதல் பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டிகள் நிலவி வருகின்றன. உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் முகாமிட்டு தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 40 சதவீத இடங்களை பெண்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

பெண்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அவர்கள் முன்னேற வேண்டும். இந்த முடிவு உத்தர பிரதேசத்தின் பெண்களுக்கானது. இந்த முடிவு மாற்றத்தை விரும்பும் பெண்களுக்கானது என தெரிவித்தார். கடந்த தேர்தலில் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், பெண்களின் வாக்குகளை கவரும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பார்க்க முடிகிறது.
இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
newstm.in

