Theme Check

நெருங்கும் பண்டிகைகள்: மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை !!

நெருங்கும் பண்டிகைகள்: மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை !!

நெருங்கும் பண்டிகைகள்: மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை !!
X

பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா 2ஆவது அலை. எனினும் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா குறைந்துள்ள போதிலும் பண்டிகை காலத்தில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

corona

மாநில அரசுக்ளுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது;- கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பயன்படுத்த வேண்டும். அதேபோல், பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.

திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் கொரோனா அதிகரிக்கலாம் என்பதால் கட்டுப்பாடுகள் அவசியம். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it