Theme Check

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 53 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து இளம் வீராங்கனை சாதனை வெற்றி !

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 53 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து இளம் வீராங்கனை சாதனை வெற்றி !

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 53 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து இளம் வீராங்கனை சாதனை வெற்றி !
X

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 18 வயதேயான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Emma-Raducanu

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் நடந்தன. இதில், இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர்.Emma-Raducanu

இருவரும் பதின் பருவ மகளிர் என்பதால் போட்டியின் வெற்றியாளர் சாம்பியன் பட்டம் மற்றும் அல்லாது வேறு சில சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார் என்பதால் போட்டி மிகவும் பரபரப்பாக தொடங்கியது.

Emma-Raducanu

இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி எம்மா ராடுகானு வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டி ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்தது. இது எம்மா ராடுகானு-க்கு முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்கா ஓபன் டென்னிசை 53 ஆண்டுகளுக்கு பின் பெற்ற முதல் பிரிட்டிஷ் பெண் இவர் ஆவார்.

newstm.in

Tags:
Next Story
Share it