Theme Check

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்வதேவ் சாம்பியன்.. ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி !

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்வதேவ் சாம்பியன்.. ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி !

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்வதேவ் சாம்பியன்.. ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி !
X

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடந்தன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு நடந்த இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் மற்றும் செர்பியா நாட்டு வீரர் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய மெட்வடேவ், நட்சத்திர வீரர் ஜோகோவிச்-க்கு பெரும் சவல் அளித்தார். 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனால், கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

medvedev-us-open-champion

தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கும் ஜோகோவிச் தோல்வி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதிப்போட்டியில் வெற்றி ஜோகோவிச் 21ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றுவார் என காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஜோகோவிச் இதுவரை 3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

medvedev-us-open-champion

இதனிடையே, நேற்று நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில், 18 வயதேயான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார்.


newstm.in


Tags:
Next Story
Share it