புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு ! மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி !!
புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு ! மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி !!

இந்தியாவில் புதிய வேளாண் சட்டங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிய வேளாண் சட்டங்களை வரவேற்பதாக அமெரிக்க அரசு கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது. முகர்பா சவுக், காசிப்பூர், ஐடிஓ, சீமாபூரி, நங்லோய் டி பாயின்ட், டிக்ரி எல்லை, செங்கோட்டை பகுதிகளில் மிகப்பெரகிய கலவரம் மூண்டது. போராட்டக்காரக்கள் செங்கோட்டையில் ஏறி, விவசாய சங்க கொடியை ஏற்றி, ஜிந்தாபாத் என முழக்கமிட்டனர்.
டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தை அடுத்து அங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, போலீசார் - விவசாயிகள் மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். அவரை போலீசார் தான் கொன்றதாக விவசாயிகளும், இல்லை இல்லை அவர் டிராக்டர் மோதிதான் உயிரிழந்தார் என்றும் போலீசாரும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், நேற்று டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் 8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 86 போலீசார் காயமடைந்துள்ளனர். வன்முறை தொடர்பாக போலீசார் பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, டெல்லியில் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு, உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை வரவேற்பதாக அமெரிக்க அரசு கருத்து தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய வேளாண் சட்டங்கள் இந்திய வணிக சந்தை வலிமையை மேம்படுத்துவதோடு தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அமைதி வழி போராட்டங்களை அங்கீகரிப்பதாகவும், பிரச்சனைகளுக்கு இரு தரப்பினரும், அதாவது மத்திய அரசும், விவசாயிகளும் சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் மோடிக்கு பெரும் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

