Theme Check

தமிழக வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்- பிரதமர் மோடி சந்திப்பு: உத்வேகத்தின் ஆதாரம் என பாராட்டு !!

தமிழக வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்- பிரதமர் மோடி சந்திப்பு: உத்வேகத்தின் ஆதாரம் என பாராட்டு !!

தமிழக வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்- பிரதமர் மோடி சந்திப்பு: உத்வேகத்தின் ஆதாரம் என பாராட்டு !!
X

பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பின்னர் கொரோனா ஊரடங்கால் இந்தியாவிலேயே இருந்த பிரதமர், கடந்த மார்ச் அண்டை நாடான வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார். இதற்கிடையே, 6 மாதத்திற்கு பிறகு அவர் மீண்டும் வெளிநாடு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.

4 நாட்கள் சுற்றுப்பயணமாக அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் சந்தித்துப் பேசினார். தனித்தனியாக இந்த சந்திப்பு நடந்தது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

modi kamala

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், தாய் வழியில் தமிழக வம்சாவளியுமான கமலா ஹாரிசை, பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா- அமெரிக்கா நட்புறவை தொடர்வது, கொரோனாவை எதிர்த்து போராடும் பணிகளை ஒருங்கிணைந்து செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

modi kamala

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியார்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா என பாராட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் துணை அதிபராக உங்களை தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள். ஜோ பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ் இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள். இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

modi kamala

கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டபோது இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியதற்காக நான் அமெரிக்காவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான பங்காளிகள். அவர்கள் ஒரே மாதிரியான மதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகை வளாகத்தில் சிறிது நேரம் உரையாடினர்.

newstm.in

Tags:
Next Story
Share it