Theme Check

ஏடிஎம் மையம் செல்லும் பெண்களே உஷார்! உங்களை சுற்றும் கழுகு..

ஏடிஎம் மையம் செல்லும் பெண்களே உஷார்! உங்களை சுற்றும் கழுகு..

ஏடிஎம் மையம் செல்லும் பெண்களே உஷார்! உங்களை சுற்றும் கழுகு..
X

தேவகோட்டை அருகே ஏடிஎம் ஒன்றில், பணம் எடுக்க உதவுவதுபோன்று நடித்து நூதன மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அனு. இவர் மகளிர் சுயஉதவி குழு மூலம் பெற்ற கடன்தொகையை எடுப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அனுவுக்கு பணம் எடுக்கத் தெரியவில்லை. அப்போது அங்கு நின்ற இளம் அவருக்கு பணம் எடுக்க உதவுவது போன்று நடித்து, ஏடிஎம் இயந்திரம் வேலை செய்யவில்லை எனக்கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடம் இருந்த கார்டை மாற்றி அளித்துள்ளார்.

ஏடிஎம் மையம் செல்லும் பெண்களே உஷார்! உங்களை சுற்றும் கழுகு..தொடர்ந்து அனுவை அருகிலுள்ள மற்றோரு ஏடிஎம்மிற்கு செல்லும்படி அனுப்பிய அப்பெண், அடுத்தநிமிடமே, அனுவின் சேமிப்பு கணக்கிலிருந்த 35ஆயிரம் ரூபாயினை எடுத்து கொண்டு தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்த குறுந்தகவல் அனுவின் செல்போனுக்கு வந்ததைகண்டு அதிர்ச்சி அடைந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சிசிடிவி காட்சியை ஆய்வுமேற்கொண்ட போலீசார், அனுவை ஏமாற்றி பணத்தை திருடிய கில்லாடி பெண்ணை கண்டறிந்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it