Theme Check

உஷார்!வங்கிகள் 7 நாட்கள் தொடர் விடுமுறை.!

உஷார்!வங்கிகள் 7 நாட்கள் தொடர் விடுமுறை.!

உஷார்!வங்கிகள் 7 நாட்கள் தொடர் விடுமுறை.!
X

மார்ச் மாதம் 2 வது வாரத்தில் பொதுத்துறை வங்கி ஊழியர்களால் நடத்தப்பட்ட நாடு தழுவிய போராட்டத்தால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் வங்கி சேவைகள் தடைப்பட்டது.இந்நிலையில் வரும் வாரத்திலும் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் சேவை தடைபடும். வாடிக்கையாளர்கள் பணபரிவர்த்தனை , காசோலை மாற்றல் உரிய வங்கி சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் மார்ச் 27முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையில், ஏழு நாட்கள் தொடர் விடுமுறை


மார்ச் 27 – மாதத்தின் 4வது சனிக்கிழமை
மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 29 – ஹோலி
மார்ச் 30 – பாட்னா வங்கிகள் விடுமுறை


மார்ச் 31- நிதியாண்டு இறுதி நாள்
ஏப்ரல் 1 – வருடாந்திர கணக்குகளை சரிபார்க்கும் நாள்
ஏப்ரல் 2 – புனித வெள்ளி
ஏப்ரல் 3 – சனிக்கிழமை அன்று வழக்கம் போல் வங்கிகள் செயல்படும் .
ஏப்ரல் 4 – ஞாயிற்றுகிழமை விடுமுறை

இதனையடுத்து வரும் வாரத்தில் வங்கிகள் இரு நாட்கள் மட்டுமே செயல்படும். விடுமுறை கால கட்டத்தில் செய்ய வேண்டிய வங்கி பரிவர்த்தனைகளை முன்கூட்டியே முடித்து வைத்து கொள்ளலாம். தொடர் விடுமுறை என்பதால் ஏடிஎம்களிலும் பணத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக திட்டமிட்டு செயல்பட்டால் கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம்.

Tags:
Next Story
Share it