உஷார்...! ஜாக்கிரதையா இருங்க... ஒரே நாளில் 11,649 பேருக்கு கொரோனா! 90 பேர் மரணம்!
உஷார்...! ஜாக்கிரதையா இருங்க... ஒரே நாளில் 11,649 பேருக்கு கொரோனா! 90 பேர் மரணம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,09,16,589 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,55,732 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 9,489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 1,06,21,220 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,39,637 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 4,86,122 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 20,67,16,634 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா முற்றிலுமாக ஒழிந்து விட்டதாகவே பொதுமக்கள் நினைத்துக் கொண்டு, சர்வ சுதந்திரமாக எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல், முக கவசமும் அணியாமல் சுற்றி வருகின்றனர். கொரோனா கொடிய வைரஸ் கிருமி. இன்னும் முற்றிலுமாக அது ஒழிந்து விடவில்லை. எனவே கொரோனா பரவுதலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

