Theme Check

உஷார்.. பணத்தை அனுப்பும்போது இந்த தவறை செய்யாதீர்கள்.. இல்லையெனில்?

உஷார்.. பணத்தை அனுப்பும்போது இந்த தவறை செய்யாதீர்கள்.. இல்லையெனில்?

உஷார்.. பணத்தை அனுப்பும்போது இந்த தவறை செய்யாதீர்கள்.. இல்லையெனில்?
X

எல்லாம் இனி டிஜிட்டல் தான்.. வங்கி செல்ல வேண்டாம், ஏடிஎமில் வரிசையில் நிற்க வேண்டாம் என பலர் கூறுவது உண்டு. ஒருவருக்கு பணம் அனுப்பவேண்டும் என்றால், நாம் நினைக்கும் அடுத்த நிமிடத்துக்குள் அதனை செய்துமுடித்துவிட முடியும் என்றும் கூறுகின்றனர். ஆனால், அத்தகைய டிஜிட்டல் எவ்வளவு பெரிய ஆபத்து என்பதும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அதாவது, இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அதிக அளவில் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்கிறார்கள். வங்கிக் கணக்காக இருந்தாலும் சரி, UPI ஆக இருந்தாலும் சரி, இந்த இரண்டு வழிகளிலும் மக்கள் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இருப்பினும், ஆன்லைனில் பணம் அனுப்பும் போது சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகள் நடக்கின்றன.

இதுபோன்ற நேரங்களில், நிதி ரீதியாக பெருயளவில் பாதிக்கப்படுவர். அதே சமயம், தவறான வங்கிக் கணக்கில் பணம் போய்விடுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே இந்த தவறுகளை ஒவ்வொருவரும் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். எனவே ஆன்லைன் பரிவர்த்தனையின் போது என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பது குறித்து அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலான பரிவர்த்தனைகளை UPI மூலம் செய்கிறார்கள். மொபைல் எண் மற்றும் UPI ஐடியை உள்ளிட்டு மக்கள் ஒருவருக்கொருவர் பணத்தை அனுப்புகிறார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், மொபைல் எண் மற்றும் UPI ஐடியை நிரப்பும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், தவறாக நிரப்ப வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். எண்ணை பதிவிடும்போது கவனம் தேவை. இல்லையெனில் வேறொருவர் வங்கி கணக்குக்கு பணம் செல்ல நேரிடும். அதேநேரத்தில் பணம் அனுப்ப தான் QR கோடு ஸ்கேன் தேவை, ஆனால் பணத்தை பெற QR கோடு ஸ்கேன் தேவையில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

newstm.in

Next Story
Share it