Theme Check

உஷார்! ஒமைக்ரானால் ஏற்பட்டுள்ள 4ஆவது அலை!!

உஷார்! ஒமைக்ரானால் ஏற்பட்டுள்ள 4ஆவது அலை!!

உஷார்! ஒமைக்ரானால் ஏற்பட்டுள்ள 4ஆவது அலை!!
X

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டால் தென் ஆப்பிரிக்கா நான்காவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா தெரிவித்துள்ளார்.

உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் கொரோனா வைரஸ், கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.

அந்த வைரஸ் தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நோய் பாதித்தவர்களுக்கு பெரிய அளவில் அறிகுறிகள் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் இது ஆரம்ப நிலை என்பதால் கணிப்பது கஷ்டம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

omicron

இந்தியாவை பொறுத்தவரை பெங்களூருவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் சிலருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களின் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டால் தென் ஆப்பிரிக்கா நான்காவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா தெரிவித்துள்ளார்.

sa omicron 2

நாட்டின் உள்ள 9 மாகாணங்களில் 7இல் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பல உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்கர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுதிய அவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்காமலேயே நான்காவது அலையை சமாளிக்க முடியும் என தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it