உஷார்! நாளை முதல் இந்த வங்கிகளின் காசோலை செல்லாது!
உஷார்! நாளை முதல் இந்த வங்கிகளின் காசோலை செல்லாது!

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் மற்ற முக்கியமான பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வகையான வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பழைய காசோலைகளை நாளை ஏப்ரல் 1ம் தேதி முதல் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகளை மட்டுமே பயன்படுத்த முடியும் .
அதன் அடிப்படையில் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இனி பஞ்சாப் நேஷனல் வங்கியின் காசோலைகள் மற்றும் கணக்கு புத்தகத்தை பயன்படுத்த வேண்டும்.

தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி இரு வங்கிகளும் பேங்க் ஆப் பரோடா காசோலை புத்தகத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகிய இரு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பேங்க் ஆஃப் இந்தியா காசோலையை இனி பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வங்கிகள் வாடிக்கையாளர்களின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளன. இதுவரை தகவல் எதுவும்பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி புதிய காசோலை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது.
ஆனால் கனரா வங்கியுடன் இணைக்கப்பட்ட சிண்டிகேட் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதம் 30 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

