Theme Check

உஷார்! வேகமாக பரவும் கொரோனா 2வது அலை!மாநகராட்சி ஆணையர் பகீர்!!

உஷார்! வேகமாக பரவும் கொரோனா 2வது அலை!மாநகராட்சி ஆணையர் பகீர்!!

உஷார்! வேகமாக பரவும் கொரோனா 2வது அலை!மாநகராட்சி ஆணையர் பகீர்!!
X

கொரோனா 2வது அலையை சமாளிக்க மாநகராட்சி தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார் ஆணையர் பிரகாஷ். தடுப்பூசி போடுவதும், மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் தான் கொரோனா பரவலை தடுக்கச் செய்யும் என்று தெரிவித்தவர், காவல்துறை உதவியுடன் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

சென்னையில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், கைவசம் தற்போது மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். 45வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். கோவிஷீல்ட், கோவாக்சின் என எந்த தடுப்பூசி கிடைத்தாலும் உடனடியாகப் போட்டுக் கொள்ளுங்கள். இரண்டும் இடது கை, வலது கை போல் ஒரே மாதிரியானவை தான்.

தடுப்பூசி போடப்பட்டவர்கள் யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. எனவே எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கான கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் ஆணையர் பிரகாஷ் குறிப்பிட்டார்.

newstm.in

Tags:
Next Story
Share it