Theme Check

உஷார்! இந்தியாவில் கொரோனா 3வது அலை! அக்டோபர் வரை ஜாக்கிரதை!

உஷார்! இந்தியாவில் கொரோனா 3வது அலை! அக்டோபர் வரை ஜாக்கிரதை!

உஷார்! இந்தியாவில் கொரோனா 3வது அலை! அக்டோபர் வரை ஜாக்கிரதை!
X

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒன்றே வழி என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் முகக்கவசம், சமூக இடைவெளி இவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தினமும் கொரோனா பரவல் 2.4% அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் கொரோனா குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கொரோனா 3வது அலையை தவிர்க்க முடியாது, அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை உருவாகலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:
Next Story
Share it