உஷார்! 2 வாரங்களில் இரட்டிப்பான ஐ.சி.யூ நோயாளிகளின் எண்ணிக்கை!!
உஷார்! 2 வாரங்களில் இரட்டிப்பான ஐ.சி.யூ நோயாளிகளின் எண்ணிக்கை!!

தமிழகத்தில் ஐ.சி.யு.வில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2 வாரத்தில் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவது அலையில் பரவும் ஒமைக்ரான் வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று முன்பு சொல்லப்பட்டது. தலைவலி, காய்ச்சல் வந்து ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை வேறு விதமாக மாறி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில் ஐசியுவில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னை, கோவை, சேலம், மதுரை, வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலேயே ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அதிகம் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 9829 ஐசியு படுக்கைகளில் 8.2% படுக்கைகள் தற்போது உபயோகத்தில் உள்ளன.
இதில் சென்னையில் தான் அதிக நோயாளிகள் உள்ளனர். அதே போல் 4013 பேர் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் உள்ள 40757 ஆக்சிஜன் படுக்கைகளில் 9.8% தற்போது பயன்பாட்டில் உள்ளன.
அதனால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல், மூன்றாவது அலை வீரியமாக இருக்காது என்று கருதாமல் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
newstm.in

