Theme Check

உஷார்! இன்று முதல் தபால் அலுவலகங்கள் 2 மணி வரை மட்டுமே இயங்கும்!

உஷார்! இன்று முதல் தபால் அலுவலகங்கள் 2 மணி வரை மட்டுமே இயங்கும்!

உஷார்! இன்று முதல் தபால் அலுவலகங்கள் 2 மணி வரை மட்டுமே இயங்கும்!
X

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. அதில் குறிப்பாக தமிழகத்தில் பரவல் கட்டுப்பாட்டை மீறி அதிகமாகி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வங்கிகள் மதியம் 2மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள் ஆகியவை செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அந்த வரிசையில் அஞ்சல்துறை குறைந்த பணியாளா்களை கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அஞ்சலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றாலும் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். இதனை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அஞ்சலகங்கள் முன்பு விளம்பரம் செய்யப்படும்.

குறைந்த பணியாளா்கள் மட்டும் பணிக்கு வர அறிவுறுத்தப்படுகின்றனர். ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் அஞ்சல் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் அதை உணா்ந்து அஞ்சல் சேவையை பயன்படுத்த வேண்டும்.


எனினும் ஸ்பீடு போஸ்ட், கடிதங்கள், பார்சல்கள் தாமதம் இன்றி அனுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை வங்கி சேமிப்பு கணக்கு பராமரிப்பதில் இதுவரை எந்த தாமதங்களும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it