உஷார்! இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா!
உஷார்! இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா!

சீனாவின் வூகாண் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டன், பிரேசில் நாடுகளில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா பரவி வருவதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரசானது, முந்தைய வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது . இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் இந்தியா திரும்பிய பயணிகளை பரிசோதனை செய்ததில், மரபணு மாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்த வரை மகாராஷ்டிரா உட்பட 18 மாநிலங்களில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.இதுவரை 736 பேருக்கு பிரிட்டனில் உருவான வைரஸ் பாதிப்பும், 34 பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் உருவான வைரசும், ஒருவருக்கு பிரேசிலில் உருவான மரபணு மாறிய வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

