Theme Check

உஷார்! இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! இவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை?!

உஷார்! இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! இவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை?!

உஷார்! இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! இவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை?!
X

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசு பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வருகின்றன.

நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை மிகத்தீவிரமாக இருக்கிறது. அந்த பாதிப்பு தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. நாள் ஒன்றுக்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வருகின்றன.

அந்த வகையில் இன்று முதல் தேநீர், பலசரக்கு, உணவகம், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றம் நகைக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும். சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. உள்ளூர், வெளியூர் பயணிகள் என யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழா, குடமுழுக்கு நடத்தக்கூடாது. குடமுழுக்கு நடத்த ஏற்கனவே அனுமதி பெற்றவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம். இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஞாயிறுக்கிழமைகளில் அனுமதி இல்லை.

திரையரங்குகள் ஏற்கனவே உள்ளது போல் 50% பார்வையாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம். விதிகளை பின்பற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள், காய்கறி கடைகள் இரவு 9 மணி வரை இயங்கலாம். அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படும்.

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

ஞாயிறு அன்று பால், பெட்ரோல், டீசல், காய்கறி கடை வழக்கம் போல் செயல்படும். உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it