Theme Check

உஷார்! தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளில் கட்டுப்பாடு!

உஷார்! தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளில் கட்டுப்பாடு!

உஷார்! தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளில் கட்டுப்பாடு!
X

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் நேரக்கட்டுப்பாடுடன் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மதியம் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனாலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக திறக்கப்பட்டிருந்த கடைகளை மக்கள் தவறான முறையில் பயன்படுத்த துவங்கியதாகவும், சரியான இடைவெளியை கடைப்பிடிக்காமல் தமிழகத்தில் கடைகளில் கூட்டமாக குவிந்து வருவதும், மதியம் 12 மணி வரையில் தினந்தோறும் வெளியே சுற்றுவதற்கு இதைப் பயன்படுத்தி வருவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தன.

இந்நிலையில், அதில் 2 மணி நேரத்தை குறைத்து காலை 10 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் திறந்திருக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மற்ற கட்டுப்பாடுகள்

  • நாளை முதல்‌ தமிழகத்தில்‌ டீ கடைகள்‌ இயங்க அனுமதி இல்லை
  • மே. 17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் கட்டாயம்
  • ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும்
  • E-Commerce நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி
  • பெட்ரோல் பங்குகள், மருந்து கடை, நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி

இதன் மூலம்,பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை போன்றவற்றை வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கவும்; அதிக தூரம் பயணிக்க முற்படுபவர்கள் இதன் மூலம் தடுக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it