உஷார்! கொரோனாவின் 2வது அலையை தடுக்க ஒரே வழி இது தான்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
உஷார்! கொரோனாவின் 2வது அலையை தடுக்க ஒரே வழி இது தான்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை காட்டிலும் ஜெட் வேகத்தில் கொத்து கொத்தாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000க்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க காரணம் அனைவரும் முகக் கவசம் அணியாததே என தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே தற்போது கொரோனா உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதுபோல் உயிரை காப்பாற்றி கொள்ள முகக் கவசமும் அவசியம் என்பதைபொதுமக்கள் உணர வேண்டும்.

முகக் கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அனைத்து கடை வியாபாரிகளும் ஒருமனதாக தீர்மானிப்பதுடன் கடை வியாபாரிகளும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். வாய், மூக்குப்பதியை முழுமையாக மூடும் வகையில் போடப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். என்னதான் அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்த போதும் பொதுமக்கள் அதனை சரிவர பயன்படுத்தினால் மட்டுமே உண்மையான பலனை எதிர்பார்க்க முடியும். கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத பட்சத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் மிகுந்த கவனத்துடன் கொரோனாவிலிருந்து விடுபட ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

