உஷார்!! இந்த 5 விஷயங்களிலும் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது!!
உஷார்!! இந்த 5 விஷயங்களிலும் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது!!

பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் எளிய மக்கள், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை குறைக்கவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுகிறது.
இந்த நிலையில், மார்ச் 1 (இன்று) முதல் பல புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன . அவற்றை பார்க்கலாம்..
சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள்:
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. இருப்பினும், பிப்ரவரியில் கச்சா எண்ணெய் விலை சாதகமாக இருந்தும் மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டடன.
பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் சிலிண்டர் விலை 710 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி 25 ரூபாய் உயர்ந்து 735 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. ரூ.50 அதிகரித்து 785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பிப்ரவரியில் மட்டும் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலைகள்:
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விகிதங்கள் தினசரி திருத்தப்படுகின்றன. ஆனால் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் அதன் விலை எட்டியுள்ளது. இருப்பினும், குளிர்காலம் முடிவடைவதால் நாட்டில் விலை குறையும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய விலையின் அதிகரிப்பு நுகர்வோரையும் பாதித்துள்ளது. குளிர்காலம் செல்லும்போது விலைகள் கொஞ்சம் குறையும். இது ஒரு சர்வதேச விஷயம், தேவை அதிகரிப்பதால் விலை அதிகமாக உள்ளது, இது குளிர்காலத்தில் நடக்கும். இது கீழே வரும் சீசன் முடிவடைகிறது என்றும் அவர் கூறினார்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு KYC கட்டாயம்
மார்ச் 1 முதல், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க விரும்பினால், அவர்களின் KYC ஐ முடித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

இந்த வங்கியின் ஏடிஎம்களில் ரூ .2000 நோட்டு இல்லை:
மார்ச் 1 முதல், இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இருந்து ரூ .2,000 நோட்டுகளை வாடிக்கையாளர்கள் பெற முடியாது. இருப்பினும், அவர்கள் வங்கி கவுண்டரிலிருந்து நோட்டுகளை பெற முடியும்.
ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுத்த பிறகு வாடிக்கையாளர்கள் அதனை ரூ.500, ரூ.200 நோட்டுகளுக்கு மாற்ற வங்கி கிளைகளுக்குள் வருகிறார்கள். அதைத் தவிர்ப்பதற்காக ஏடிஎம்களில் ரூ .2,000 நோட்டுகளை உடனடியாக ஏற்றுவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று இந்தியன் வங்கி கூறினார்.

சுங்கச் சாவடிகளில் இலவச ஃபாஸ்டேக் இல்லை:
மார்ச் 1 முதல், வாடிக்கையாளர்கள் டோல் பிளாசாக்களிலிருந்து ஃபாஸ்டேக் வாங்க ரூ .100 வழங்க வேண்டும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் கடந்துசெல்ல ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

