#BREAKING - உத்தரகாண்ட் பனிபாறை விபத்து - பிரதமர் மோடி ட்வீட் !!
#BREAKING - உத்தரகாண்ட் பனிபாறை விபத்து - பிரதமர் மோடி ட்வீட் !!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கா நதிக்கரையில் மின்சார உற்பத்தி நிலைய பணிகள்நடைபெற்று வந்தது. அப்போது திடீரென பனிப்பாறை உடைந்துள்ளது. இதனால், கங்கா நதியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது இதில், வேலை செய்து கொண்டு இருந்த சுமார் 150 -க்கும் மேற்பட்டோர் காணவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
மேலும், விமானப்படை உதவியுடன் மீட்பு பணியில் ஈடுடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரகாண்ட் மாநில முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.மேலும், அம்மாநில காவல்துறை தலைவருடன் அவர் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்டிட்டர் பதிவில், உத்தரகாண்ட் பனிப்பாறை வெள்ளம் தொடர்பாக தாமும், தமது அலுவலகமும் தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை கண்காணித்து வருவதாகவும், இந்த பேரிடருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், இந்த சேதமே உத்தராகாண்ட் மாநிலத்திற்கு துணை நிற்கும் என்றும், மேலும், அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க தேசமே பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Am constantly monitoring the unfortunate situation in Uttarakhand. India stands with Uttarakhand and the nation prays for everyone’s safety there. Have been continuously speaking to senior authorities and getting updates on NDRF deployment, rescue work and relief operations.
— Narendra Modi (@narendramodi) February 7, 2021

