Theme Check

குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி! எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!

குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி! எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!

குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி! எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!
X

இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா வைரஸ் தொடங்குவதற்கு முன்பாகவே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க வாய்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் அலையை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி போடுவதன் மூலம் அடுத்த அலையை தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் தான் மூன்றாம் அலை பரவலுக்கு வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்து வரும் சூழலில், மூன்றாம் அலையினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 2 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மே 12ஆம் தேதி அனுமதி அளித்தது.

இதுகுறித்து தற்போது தெரிவித்துள்ள எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் க்ளேரியா, குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் முயற்சியின் 2 மற்றும் 3ஆம் கட்ட நிலைகள் செப்டம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே மாதத்தில் குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it