Theme Check

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த பயிற்சி.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் !

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த பயிற்சி.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் !

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த பயிற்சி.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் !
X

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு, தடுப்பூசி போடுபவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

15 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி அளித்தது. இது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

corona

அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, 15 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக தடுப்பூசி செலுத்துவோருக்கு உரிய பயிற்சிகளை வழங்குமாறும், கோவேக்சின் தடுப்பூசி மட்டும்தான் வழங்கப்பட வேண்டும் என்பதை பணியாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

corona

குழந்தைகளுக்கு தடுப்பூசி சேர்த்துக் கொள்வதற்கு தனியாக தடுப்பூசி மையங்களை உருவாக்கி கொள்ளலாம் என்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஏற்படும் சில உடல் நல பாதிப்புகள் குறித்து குழந்தைகளிடம் விளக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில், 15 முதல் 18 வயது வரையிலான சுமார் 7 முதல் 8 கோடி வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it