Theme Check

இந்தியாவில் 12- 18 வயதினருக்கும் வந்தாச்சு கொரோனா தடுப்பூசி !

இந்தியாவில் 12- 18 வயதினருக்கும் வந்தாச்சு கொரோனா தடுப்பூசி !

இந்தியாவில் 12- 18 வயதினருக்கும் வந்தாச்சு கொரோனா தடுப்பூசி !
X

நாட்டில் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு தயாரிப்பான கோர்பெவேக்ஸ் தடுப்பூசிக்கு, அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது. இந்த தகவலை பயாலஜிகல் இ லிமிடட் தெரிவித்துள்ளது. இந்த கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

corbevax vaccine

ஏற்கனவே, இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு கோவேக்ஸின் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு, அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 2 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டு டோசும் செலுத்தப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it