தடுப்பூசி போடலனா தியேட்டர்ல இடம் இல்லை!!
தடுப்பூசி போடலனா தியேட்டர்ல இடம் இல்லை!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பேருந்து நிலையம் அருகில் தியேட்டர் ஒன்று உள்ளது. இந்த தியேட்டர் முன்பு கொரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
சினிமா பார்க்க வரும் அனைவரிடத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான குறுஞ்செய்தி இருந்தால் மட்டுமே சினிமா பார்ப்பதற்கு அனுமதி என்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 81 விழுக்காடு நபர்கள் செலுத்தியுள்ளனர். இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் மிகப் பெரிய துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட், போன்ற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறினார்.
தேவைப்பட்டால் டாஸ்மார்க் கடைகள், கோயில்கள், ஆகியவற்றின் முன்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அனுமதி என்ற வரையறை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
newstm.in

