Theme Check

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி- ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது !!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி- ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது !!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி- ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது !!
X

18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு தொடங்கியது.

இந்தியாவில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மத்திய அரசு ஊரடங்கு விதிக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் ஒன்றாம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதனால் ஏராளமானவர்கள் தடுப்பூசி மையங்களில் குவிய வாய்ப்புள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட நேரடியாக மருத்துவமனைகளுக்கோ, தடுப்பூசி மையங்களுக்கோ செல்வதற்கு பதில் COWIN என்ற அரசின் தளத்தில் அல்லது ஆரோக்ய சேது செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற விதிகொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்பதிவு செய்வதற்காக ஏராளமானோர் நள்ளிரவு 12 மணி முதல் முயற்சித்தனர். ஆனால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என வந்ததால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில், இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி தற்போது முன்பதிவு தொடங்கியது.

மாநில அரசுகளிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பொருத்து பயனாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 18 வயதை கடந்தவர்கள் www.CoWin.gov.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.


newstm.in

Tags:
Next Story
Share it