இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை! மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்!
இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை! மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த போதிலும் அதிக உச்சம் பெற்று முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா தான். ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டும் மொத்தம் சுமார் 59,907 பேர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 322 பேர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 1.16 லட்சம் பேர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.29 கோடி. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1.67பேர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளானது, தடுப்பூசி பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்ட பிறகு மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படவில்லை. தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. மகாராஷ்டிரா கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

