கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் வடிவேலு!!
கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் வடிவேலு!!

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேறு தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் இசை உருவாக்கப் பணிக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் ஆகியோர் லண்டன் சென்றிருந்தனர்.
அங்கு 10 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்த வடிவேலு லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். இந்நிலையில் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.
அதனைத் தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜிக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த வடிவேலு, நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நலமுடன் திரும்பிய அவர், மக்களின் அன்பை அறிந்து நெகிழ்ந்து போனதாக கூறியுள்ளார்.
அவரை மூன்று நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வடிவேலு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையும் என வாழ்த்துகிறேன் என அவர் கூறியுள்ளார்.
newstm.in

