திருமணத்துக்கு தயாரான போது காதலர் மரணம்.. சோகத்தில் தவிக்கும் நடிகை !!
திருமணத்துக்கு தயாரான போது காதலர் மரணம்.. சோகத்தில் தவிக்கும் நடிகை !!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சித்தார்த் சுக்லா. இவர் கடந்த 2ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். 40 வயதே ஆன சித்தார்த் திடீர் என்று இறந்த செய்தி பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்தார்த்தின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது சித்தார்த் குறித்து புதிய தகவல் வெளியாகி பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. சித்தார்த்தும், நடிகை ஷெஹ்னாஸ் கில்லும் காதலித்து வந்தார்கள். சித்தார்த்துக்கும், ஷெஹ்னாஸுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாம். டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
திருமணத்தை மும்பையில் மூன்று நாட்கள் நடத்த திட்டமிட்டு இருந்தனர். சித்தார்த், ஹெஷ்னாஸ் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியுமாம். திருமண நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்று ரகசியமாக வைத்திருந்தார்களாம்.

திருமண கனவு கண்டு வந்த நிலையில் சித்தார்த் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஷெஹ்னாஸுடன் சேர்ந்து பணியாற்றிய நடிகை ஜஸ்லீன் கூறியதாவது, நான் ஷெஹ்னாஸிடம் பேசினேன். அவர் ஒரு இடத்தில் அமர்ந்து எதுவும் பேசவில்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவர் அருகில் சென்று பேச முயன்றபோது என் பக்கத்தில் உட்காரு என்றார். ஷெஹ்னாஸுடன் அவரின் சகோதரர் இருக்கிறார். அவர் நிச்சயம் நல்லபடியாக பார்த்துக் கொள்வார் என்றார்.
newstm.in

