வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி !!

வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி !!

வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி !!
X

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் ஹெச்.வினோத் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.அந்த திரைப்படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான தீரன் படம் ஹெச்.வினோத்தை தவிர்க்க முடியாத இயக்குநராக மாற்றியது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது படத்திலேயே அஜீத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தை நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் வினோத் இயக்கினார்.

தற்போது மீண்டும் அஜீத்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். ஆனால் வலிமை படத்தின் ஷீட்டிங்க ரொம்ப நாட்களாக நடந்து வருகிறது.வலிமை படம் குறித்து எப்போது அப்டேட் கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட அறிவிப்பு தல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .“ எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித்குமார் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம். அந்த அறிவிப்பு வெளிவரும்போது கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து உற்றார் உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

இத்தகைய அதாசாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ் பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும், பாதுகாப்பாகவும் பிராத்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:
Next Story
Share it