Theme Check

டில்லி சென்றுள்ள முதல்வருக்கு வானதி சீனிவாசன் விடுத்துள்ள கோரிக்கை..!

டில்லி சென்றுள்ள முதல்வருக்கு வானதி சீனிவாசன் விடுத்துள்ள கோரிக்கை..!

டில்லி சென்றுள்ள முதல்வருக்கு வானதி சீனிவாசன் விடுத்துள்ள கோரிக்கை..!
X

பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளரும், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி தமிழகத்திற்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். முதல்வராக டில்லி சென்றிருக்கும் ஸ்டாலினின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.

பாஜகவை கடுமையாக விமர்சித்த திமுக இனியாவது பிரதமரின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும். மத்திய அரசு 42 லட்சம் தடுப்பூசி வழங்கியுள்ள நிலையில் அவைகளை மக்களுக்கு விரைந்து செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கும். தடுப்பூசிகள் வீணாகாமல் அரசு தடுக்க வேண்டும்.

இன்று நடக்கும் சந்திப்பில் கோதாவரி, காவிரி நதிநீர் இணைப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் மோடியிடம் பேச வேண்டும். இதன் மூலமாக மத்திய அரசின் நிதி உதவியைப் பெற்று பிரதமரே திட்டத்தை மூன்று வருடத்தில் துவக்கி வைக்க முடியும்.

மேலும், பாஜக சட்டப்பூர்வ நடவடிக்கை எதிராக கட்சி இல்லை. பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் குரலாக பாஜக இருக்கும்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Tags:
Next Story
Share it