Theme Check

வந்தாச்சு பசுமை ஆட்டோ - பெட்ரோல் செலவு கம்மி லாபம் அதிகம்..!!

வந்தாச்சு பசுமை ஆட்டோ - பெட்ரோல் செலவு கம்மி லாபம் அதிகம்..!!

வந்தாச்சு பசுமை ஆட்டோ - பெட்ரோல் செலவு கம்மி லாபம் அதிகம்..!!
X

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் டவுன் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஆலிவர் என்பவர் பேட்டரியில் இயங்கும் பசுமை ஆட்டோவை வாங்கி ஓட்டி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “வெளியூரில் டிரைவராக பணிபுரிந்த நான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினேன்.

சொந்தமாக கடை அல்லது வேறு தொழில் செய்ய நினைத்தேன். ஆனால், அதில் முதலீடு செய்யும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. இந்த நிலையில் ஆட்டோ ஓட்ட முடிவு செய்தேன். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

அப்போதுதான், தெலுங்கானாவில் ஒரு நிறுவனம் பேட்டரியில் இயங்கும் பசுமை ஆட்டோ தயாரித்து விற்பதை அறிந்தேன். இதையடுத்து, 2.10 லட்சம் ரூபாய்க்கு அந்த ஆட்டோவை வாங்கி ஓட்டி வருகிறேன். பெட்ரோல் செலவு மிச்சம். இதனால் அதிக லாபம் கிடைக்கிறது.

இந்த ஆட்டோவில் பொருத்தப்பட்டிருப்பது 48 வோல்ட் லித்தியம் பேட்டரி ஆகும். 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவை ஓட்டலாம். கூடுதலாக சோலார் பேனலும் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு 3 ஆண்டு உத்தரவாதம் உள்ளது. இந்த ஆட்டோ மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிகள், நோயாளிகள் மற்றும் முதியோர்கள் விரும்பி வந்து எனது ஆட்டோவில் பயணம் செய்கின்றனர். எதிர்காலத்தில் இந்தவகை ஆட்டோக்கள் சாலைகளில் அதிகளவில் ஓடும்” என அவர் தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it