ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கும் வனிதா விஜயகுமார் !!

ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கும் வனிதா விஜயகுமார் !!

ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கும் வனிதா விஜயகுமார் !!
X

நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். இவருக்கு ஏற்கனவே ஒரு மகனும், 2 மகள்களும் உள்ள நிலையில் மனைவியை விவாகரத்து செய்யாத பீட்டர்பால் என்பவரை காதலித்து சமீபத்தில் 3வது திருமணம் செய்து சர்ச்சையை கிளப்பினார். இதுகுறித்து மற்ற திரை நட்சத்திரங்களுடன் மோதலும் உருவானது. பீட்டர் பால், குடிபோதைக்கு அடிமையாக இருப்பதாக சொல்லி கண்ணீர் விட்டு அழுத வனிதா தற்போது மறுபடியும் சினிமாவில் நடிக்க வருகிறார். 1995-ல் விஜய்யுடன் இணைந்து நடித்த சந்திரலேகா படத்திற்கு பிறகு வனிதா நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

தற்போது வனிதாவுக்கு புதிய படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமான அனல் காற்று என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து பாம்பு சட்டை படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனர் அவதாரம் எடுத்த ஆதம் தாசன்,இந்த படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக வனிதா உடலை குறைக்க உடற்பயிற்சிகள் செய்து தயாராகி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Tags:
Next Story
Share it