Theme Check

‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம்.. தகவல் அளிப்பவருக்கு ரூ.500 சன்மானம்..!

‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம்.. தகவல் அளிப்பவருக்கு ரூ.500 சன்மானம்..!

‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம்.. தகவல் அளிப்பவருக்கு ரூ.500 சன்மானம்..!
X

“அனுமதியில்லாத இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு, பரிசு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளேன்” என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் வலுவாக இருக்க வாழ்த்துகிறேன்; தோல்வியடைந்தால் வெற்றியும் ஒரு நாள்  உண்டு!
“நாட்டில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நான்கு பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறு வாகனங்கள் உள்ளன.

மக்கள் வாகனங்களை நிறுத்துவதில் காட்டும் அலட்சியத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. டெல்லியில் சாலைகள் மிக அகலமாக உள்ளதால், பலரும் தங்கள் வாகனங்களை வீட்டுக்குள் நிறுத்தாமல், சாலையோரத்தில் நிறுத்துகின்றனர்.

இதுபோல், அனுமதியில்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க, ஒரு திட்டம் வைத்துள்ளேன். இத்தகைய இடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.

அனுமதி இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை புகைப்படம் எடுத்து போலீசுக்கு அனுப்புவோருக்கு, 500 ரூபாய் பரிசளிக்க வேண்டும். அதை செயல்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர ஆலோசித்து வருகிறேன்” என்று அவர் கூறினார்.

Next Story
Share it