Theme Check

தமிழ்நாட்டில் 6 இடங்களில் சதம் அடித்த வெயில்!!

தமிழ்நாட்டில் 6 இடங்களில் சதம் அடித்த வெயில்!!

தமிழ்நாட்டில் 6 இடங்களில் சதம் அடித்த வெயில்!!
X

தமிழகத்தின் 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது.

கடந்த இருவாரங்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதனால், தென் மாவட்டங்களில் பல இடங்களில் குளிர்ந்த சூழல் நிலவியது. இந்த நிலையில், மீண்டும் வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.

summer 2

நேற்று ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 37.8 டிகிரி செல்சியஸும் (100.4 டிகிரி ஃபாரன்ஹீட்), கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் 39 டிகிரி செல்சியஸும்(102.2 டிகிரி ஃபாரன்ஹீட்).

மதுரையில் 38 டிகிரி செல்சியஸும்(100.4 டிகிரி ஃபாரன்ஹீட்), தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸும்(100.4 டிகிரி ஃபாரன்ஹீட்), திருச்சியில் 39.5 டிகிரி செல்சியஸும்(103.1 டிகிரி ஃபாரன்ஹீட்), திருத்தணியில் 39.1 டிகிரி செல்சியஸும்(102.3 டிகிரி ஃபாரன்ஹீட்) வேலூரில் 39 டிகிரி செல்சியஸும்(102.2 டிகிரி ஃபான்ஹீட்) பதிவாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it