வெளி மாநிலத்தோரை வெளியேற்ற வேலூர் கலெக்டர் உத்தரவு..!
வெளி மாநிலத்தோரை வெளியேற்ற வேலூர் கலெக்டர் உத்தரவு..!

வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு நாடு முழுதும் இருந்து நோயாளிகள், உதவியாக உறவினர்கள் வருகின்றனர். இதனால், தொற்று பரவ வாய்ப்பு அதிகமாகிறது.
நேற்று முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், வேலூரில் பாபுராவ் தெரு, காந்தி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
அங்குள்ள விடுதி உரிமையாளர்களிடம், வெளிமாநிலத்தவரை சொந்த ஊர்களுக்கு அனுப்ப அறிவுறுத்தினார். அதன்பின்னர், நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:

“மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிஎம்சி மருத்துவமனையில் சாதாரண சிகிச்சைக்கு வெளி மாநிலத்தவரை அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுதிகளில் உள்ள வெளி மாநிலத்தவரை சொந்த ஊர் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணம், தேர்வு நடத்த அனுமதிக்கப்படுகிறது.
மக்கள் குறை தீர் கூட்டம், விவசாய குறைதீர் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. விஏஓ-க்கள் - தாசில்தார்களிடம் குறைதீர் மனுக்களை அளிக்கலாம்” என அவர் கூறினார்.

