Theme Check

பிரபல நடிகையுடன் வெங்கடேஷ் ஐயர் காதல்?

பிரபல நடிகையுடன் வெங்கடேஷ் ஐயர் காதல்?

பிரபல நடிகையுடன் வெங்கடேஷ் ஐயர் காதல்?
X

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக ஆடி வருபவர் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 27 வயதான இவர் ரஞ்சியில் மத்தியபிரதேச அணிக்காக ஆடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் ஜொலித்த அவர் இந்தியஅணியிலும் வாய்ப்பை பெற்றார். தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தார்.

ஆனால் இந்த சீசனில் இதுவரை நடந்த 3 போட்டியிலும் 16, 10,3 என ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் பிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

venkatesh iyar

பிரபல தெலுங்கு நடிகை பிரியங்கா ஜவால்கர் முன்னணி நாயகியாக உள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் டேக்ஸிவாலா படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட படம் ஒன்றுக்கு வெங்கடேஷ் க்யூட் என்று கமெண்ட் போட்டார். அதற்கு பிரியங்காவும் யாரு, நீங்களா என்று பதில் கமெண்ட் போட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் காதல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிஏ முடித்த இவர் தனக்கு கிடைத்த வேலையை உதறிவிட்டு கிரிக்கெட் களத்தில் இறங்கினார். தற்போது காதல் பயணத்தில் செல்கிறாரா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

venkatesh iyar

ஒரு கிரிக்கெட் வீரரும், நடிகையும் காதலிப்பது புதிது அல்ல. இருப்பினும் இந்த காதலை வெங்கடேஷும், ப்ரியங்காவும் உறுதி செய்யவில்லை. 2017ம் ஆண்டு நடிகையான ப்ரியங்கா, இதுவரை 5 படங்களில் நடித்திருக்கிறார்

newstm.in

Tags:
Next Story
Share it