ரொம்ப சந்தோஷப்படாதீங்க முதல்வரே.. போட்டு பொளந்த சி.வி.சண்முகம்..!
ரொம்ப சந்தோஷப்படாதீங்க முதல்வரே.. போட்டு பொளந்த சி.வி.சண்முகம்..!

சென்னை திருவான்மியூரில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேத்தி தீப்தி - விஸ்வக்சேனா திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
அந்த பிரச்சனைக்கு நான் போக விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை” என, அதிமுக பொதுக்குழுவை சூசகமாக சுட்டிக்காட்டிப் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்த இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கும் வகையில் இன்று பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ரொம்ப சந்தோஷப்படாதீங்க முதல்வரே.
அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என வரிசையாக தலைமைப் பதவிக்கு வரும் இயக்கம் திமுக. காலம் விரைவில் வருகிறது.
உங்கள் மகன் உதயநிதிக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்து வைப்பீர்கள். அது நடக்கும் போது என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.
அதிமுக என்பது ஜனநாயக முறையில் வெளிப்படையாக நடத்தப்படும் இயக்கம். இதுவரை எந்த பொதுக்குழுவிலும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டது இல்லை.
ஆனால், நேற்று எல்லோரையும் அழைத்து உள்ளே அனுமதித்தோம். அதிமுக ஜனநாயக இயக்கம். இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். எல்லாக் கட்சியிலும் உட்கட்சி பிரச்சனைகள் வருவதும், தீர்க்கப்படுவதும் உண்டு. உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது..?
திமுக என்ன அப்படியே ஜனநாயக முறைப்படி நடக்கிற கட்சியா..? அதிமுகவைப் பற்றி பேசும் தகுதி திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் இல்லை. அடிப்படைத் தொண்டர்களால் நடத்தப்படுகிற இயக்கம் அதிமுக. திமுகவை போல் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Next Story

