மீண்டும் இணையும் விஜய்- அட்லி கூட்டணி ?

மீண்டும் இணையும் விஜய்- அட்லி கூட்டணி ?

மீண்டும் இணையும் விஜய்- அட்லி கூட்டணி ?
X

‘தளபதி 68’ படத்துக்காக விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் பெரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் நடிகர் விஜய் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். தோழா, மஹரிஷி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இப்படத்தை இயக்கவுள்ளார்.

இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படம் என்பதால் 'தளபதி 66' என்று அழைக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

bigil_vijay

இப்படத்துக்குப் பிறகு விஜய் 67 ஆவது படத்துக்கான கதை தேர்வு நடந்து வருகிறது. ‘தளபதி 67’ படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. வெற்றிமாறன் அல்லது மகிழ் திருமேனியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘தளபதி 68’ படத்துக்காக விஜய் மீண்டும் அட்லியுடன் இணையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் விஜய் நடித்துள்ளார். இதனையடுத்து தற்போது நான்காவது முறையாக இருவரும் இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஷாரூக் கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்தபிறகே அடுத்த படத்துக்கான பணிகளை அட்லி தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it